தமிழகம்

1.உணவு உற்பத்தியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருது பெற்றுள்ளது என தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


இந்தியா

1.காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சிஆர்பிஎஃப் படையினரை, காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரி தலைமையில்தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், ஒரே சமயத்தில் 40 வாகனங்களுக்கு மேல் அணிவகுக்கக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2.நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

3.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தாக்கலை எளிமைப்படுத்தும் விதமாக இம்மாதத்தில் சோதனை அடிப்படையில் படிவங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.மூலப் பொருட்கள் விலை உயர்வால், பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் விலையை, தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.


உலகம்

1.செவ்வாய் கிரகத்தில் பறந்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) வடிவமைத்துள்ள ஹெலிகாப்டரை, அந்த அமைப்பு வெற்றிகரமாக சோதித்துள்ளது.

2.மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேக்கியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஊழல் எதிர்ப்பு ஆர்வலரும், வழக்குரைஞருமான சுஸானா கபுதோவா அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார்.


விளையாட்டு

1.தைவானில் நடைபெற்று வரும் ஆசிய ஏர்கன் சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

2.மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி சாம்பியன் பட்டம் வென்றார்.


ன்றைய தினம்

  • சிங்கப்பூர், பிரிட்டன் குடியேற்ற நாடானது(1826)
  • கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது(2004)
  • மலாய் கூட்டமைப்பு உருவானது(1946)
  • இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(1957)
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1935)

– தென்னகம்.காம் செய்தி குழு