Current Affairs – 09 March 2018
இந்தியா
1.பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரான் நான்கு நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
2.நாகாலாந்து மாநில முதல்வராக நெய்பியூ ரியோ, துணை முதல்வராக ஒய்.பட்டான் ஆகியோர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். கவர்னர் ஆச்சார்யா இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உலகம்
1.இங்கிலாந்து நாட்டில் தொழில் துறை மாணவர்கள் திட்டத்தின் அதிகாரபூர்வ திறன் தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சஞ்சீவ் குப்தாவை நியமித்து, இளவரசர் சார்லஸ் உத்தரவிட்டு உள்ளார்.
2.உலகளவில் கட்டடக்கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசுக்கு இணையான பிரிட்ஸ்கர் விருது இந்தியாவின் பி.வி.தோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம்
1.2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
2.2011 – டிஸ்கவரி விண்ணோடம் தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.
–தென்னகம்.காம் செய்தி குழு