இந்தியா

1.உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்றால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
2.மறைந்த உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானாவின் 96-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.


உலகம்

1.உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு முதலில் பிறக்கிறது. அந்த வகையில் நியூசிலாந்தில் 2018-ம் ஆண்டு பிறந்தவுடன், அங்குள்ள ஆக்லாந்து நகரில் இருந்து ஹவாயியன் ஏர்லைன் 446 என்ற விமானம் நள்ளிரவு 12.05 மணிக்குக் கிளம்பியது. அங்கிருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹோனோலுலு நகரை 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 10.15 மணிக்குத் தரையிறங்கியது.நியூசிலாந்துக்கும், ஹவாய் தீவுக்கும் இடையே சுமார் 23 மணி நேர இடைவெளி இருந்ததால் இந்த சம்பவம் நடந்தது.


இன்றைய தினம்

1.1788 – கனெடிகட் 5வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
2.1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு