Current Affairs – 09 February 2018
இந்தியா
1.கூகுள் நிறுவனத்துக்கு 135.86 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பிரபல திருமண சேவை இணைய தளம் ஒன்று வலைதளமான கூகுள் தேடு பொறியியல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தது.இதை தொடாந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த அபராத தொகையினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.2021-2022-ம் நிதி ஆண்டுக்குள், 24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகம்
1.சீனாவில் குற்றவாளிகளை பார்த்த உடன் கண்டுபிடிக்க போலீசாருக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்குகிறது.
2.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜுலன் கோஸ்வாமி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
3.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.சங்ககாரா (இலங்கை-482) முதல் இடத்திலும், கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா-472) 2-வது இடத்திலும், மார்க் பவுச்சர் (தென்ஆப்பிரிக்கா-424) 3-வது இடத்திலும் உள்ளனர்.
இன்றைய தினம்
1.1900 – டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.
2.1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
3.1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு