Current Affairs – 09 April 2018
உலகம்
1.நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஒன்றுதிரண்ட சுமார் 9 ஆயிரம் சீக்கியர்களுக்கு 8 மணி நேரத்திற்குள் தலைப்பாகை கட்டி முடித்ததன் மூலம் புதிய உலக சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.
2.சிங்கப்பூர் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி பொதுச்செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தம் சிங் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வர்த்தகம்
1.ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழுவில் அரசின் சார்பாக நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினர் அமித் அகர்வால் மாற்றப்பட்டு அவரது இடத்தில் லோக் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம்
1.1967 – போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு