இந்தியா

1.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் விடுமுறை விடப்படுகிறது என தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
2.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாடட்டத்தில் உள்ள கோவிலில் மனித இரத்தத்தால் காளி சிலைக்கு அபிஷேகம் செய்யும் சடங்கிற்கு அறநிலையத்துறை நேற்று தடை விதித்துள்ளது.


உலகம்

1.லண்டன், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்களில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் பயணிகள் கமகமக்கும் பில்டர் காபியை சுவைக்க ஜெட் ஏர்வேஸ் ஏற்பாடு செய்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச பெண்கள் தினம்(International Women’s Day).
ஐ.நா. சபை பெண்களுக்கு சம உரிமை வழங்குவது என்பது மனித அடிப்படை உரிமை எனக் கூறி 1945ஆம் ஆண்டில் கையொப்பம் இட்டது. அதன்பின்னர் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என தனது உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டது. 1946ஆம் ஆண்டுமுதல் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு