Current Affairs – 08 January 2018
தமிழகம்
1.இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம் (பி-2), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதினை மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார்.சிறந்த 10 காவல்நிலைய பட்டியலில் தமிழகத்தின் மற்றொரு காவல் நிலையமாக அண்ணாநகர்(கே-4) தேர்வாகி உள்ளது. இது 5-வது இடத்தை பிடித்துள்ளது.
2.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு பி.மணிசங்கர்,சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு பி.குழந்தைவேல் ஆகியோர் புதிய துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா
1.பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆர்.கே.பீச் எனப்படும் ராமகிருஷ்ணா கடற்கரை பகுதியில் திருவள்ளுவரின் சிற்பத்தை உருவாக்கி கவுரவித்துள்ளார்.
இன்றைய தினம்
1.இன்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவன தினம் (African National Congress Foundation Day).
தென்னாப்பிரிக்க கருப்பு இன மக் களின் உரிமைகளுக்காகப் போராட தென்னாப்பிரிக்கப் பழங்குடியினரின் தேசிய காங்கிரஸ் 1912ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சியின் முதலாவது தலைவர் சோல் பிளாட்ஜி. இக்கட்சியின் பெயர் 1923ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் என்று மாற்றப்பட்டது. இது தற்போது தென்னாப்பிரிக்காவின் ஆளும் கட்சியாக உள்ளது.
–தென்னகம்.காம் செய்தி குழு