தமிழகம்

1.21 ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகளை இடமாற்றம்செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் கூடுதல் இயக்குநராக சீதா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டுப்புழு வளர்ச்சித்துறை இயக்குனராக வெங்கட பிரியா நியமனம்.
வணிகவரித்துறை இணையாக சிவராக நியமனம். சுகாதார முறை திட்ட இயக்குநரானார் உமா.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.
அருங்காட்சியாக இயக்குராக கவிதா ராமு நியமனம். ஆவணக்காப்பக இயக்குநராக அன்பழகன் நியமனம்.


இந்தியா

1.ஜிஎஸ்டியில் 27 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.ஆண்டு விற்பனை ரூ.1.5 கோடி வரை உள்ள நிறுவனங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்குத் தாக்கல் செய்தால் போதுமானது.

2.உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பாக தாங்கள் மேற்கொள்ளும் முடிவுகள் அனைத்தையும், உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு கொலீஜியம் குழு முடிவு செய்துள்ளது.

3.எஸ்.பி.ஐ., தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா, ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைவராக, ரஜ்னிஷ் குமார், இன்று பொறுப்பேற்கிறார்.


உலகம்

1.அணுஆயுத ஒழிப்புக்காக போராடி வரும் ஐகேன்(ICAN) அமைப்புக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது

2.நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது


விளையாட்டு

1.17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது.


இன்றைய தினம்

1.1919 – நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.

தென்னகம்.காம் செய்தி குழு