இந்தியா

1.ரவீந்திரநாத் தாகூர் கையெழுத்திட்ட ‘தி கிங் ஆஃப் தி டார்க் சாம்பர்’ புத்தகம் அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனம் மூலம் ஏலத்திற்கு வந்துள்ளது.
2.திரிபுராவில் ஆட்சியமைக்க உள்ள பா.ஜ.க சார்பில் மாநில கட்சியின் தலைவர் பிப்லாப் குமார் தேப் முதல்வராகவும், ஜிஷ்னு தேப் பர்மன் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
3.மேகாலயா மாநில முதல்வராக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.


உலகம்

1.உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தை பிடித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இவரை தொடர்ந்து, மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.


இன்றைய தினம்

1.1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு