தமிழகம்

1.தமிழகத்தின் 4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது.


இந்தியா

1.இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் தினமும் 360 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
2.இந்திய பொருளாதார சங்கத்தின் தலைவராக வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.அகில இந்திய அளவில், 2016 -2017 கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியரின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.


விளையாட்டு

1.கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் அந்நாட்டின் தலைநகரான தோஹாவில் நடைபெற்றது.இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷியாவின் அண்ட்ரே ருப்லெவ்வை வீழ்த்தி பிரான்சின் கெய்ல் மோன்பில்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் புருனோ சோரஸ் (பிரேசில்) – ஜேமி முர்ரே (பிரிட்டன்) ஜோடியை வீழ்த்தி, மேட் பவிக் (குரோசியா) – ஆலிவர் மரச் (ஆஸ்திரியா) ஜோடி பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
2.1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு