இந்தியா

1.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் மொத்தம் 192 கிலோ எடையை தூக்கிய சஞ்சிதா சாதனை காமன்வெல்த் சாதனையை முறியடித்தார்.இதன் மூலம் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .
2.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதலில் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 3வது தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.இதன் மூலம் இந்தியாவிற்கு மூண்றாவது தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

1.இன்று உலக சுகாதார தினம்(World Health Day).
மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
2.இன்று ருவாண்டா இனப்படுகொலை நினைவு தினம்(Day of Remembrance of the Rwanda Genocide).
ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று இனப்படுகொலை தொடங்கியது. இது 100 நாட்களுக்கு மேல் நடந்தது. இதில் 20 சதவீதமான மக்கள் இறந்தனர். அதாவது 80000 அப்பாவி மக்கள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்காகவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு