இந்தியா

1.தவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் 3 ஆண்டுகள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது என்ற புதிய மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
2.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு உண்டியல் மூலம் ரூ.995.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
3.சாக்லெட் பழுப்பு (பிரவுன்) நிறத்தில் புதிய 10 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
4.மேற்கு வங்காளம் மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வடிவமைத்த பிரத்யேக மாநில சின்னமான பங்ளா சின்னத்திற்கு (Biswa Bangla logo) மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.


 உலகம்

1.பாகிஸ்தான் நாட்டின் முதல் விமானப்படை தளபதி அஸ்கர் கான் தனது 96-வது வயதில் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.


இன்றைய தினம்

1.1066 – இங்கிலாந்தின் மன்னராக ஹாரல்ட் கோட்வின்சன் முடிசூடினார்.
2.1899 – இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.
3.1912 – நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
4.1936 – கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.
5.1946 – வியட்நாமில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.

 

–தென்னகம்.காம் செய்தி குழு