இந்தியா

1.அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தி.மு.க இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
2.ஒடிசா மாநிலம் அருகே வங்க கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி-1 (ஏ) ஏவுகணையை செலுத்தி இன்று காலை 8.30 மணிக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.. 15 மீட்டர் உயரமும், 12 டன் எடையும் கொண்ட இந்த குறைந்த தூர இலக்கை தாக்கும் ஏவுகணை சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கவல்லது.
3.நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் கந்த்-தின் பதவிக்காலத்தை 2019-ம் அண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று பெண் இனப்பெருக்கத்தை அழிப்பதை ஒழிக்கும் சர்வதேச தினம் (International Day of Zero Tolerance to Female Genital Mutilation).
பெண் பிறப்புறுப்பு சிதைப்புடன் சுமார் 125 மில்லியன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற 29 நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இது பெண்களுக்கு எதிரான தீவிர பாகுபாடாகும். இது சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவான சிகிச்சையாகும். இதனை ஒழித்திட, விழிப்புணர்வு ஏற்படுத்திட 2012 இல் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு