இந்தியா

1.சமீபத்தில் நேபாள பிரதமராக பதவியேற்ற கே.பி.சர்மா ஒலி இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். அவரது மனைவி ராதிகா சகாய ஒலியும் அவருடன் இன்று இந்தியா வருகிறார்.


உலகம்

1.சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் ( 48 கிலோ) இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் (56 கிலோ) இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.சாய்கோம் மீராபாய் சானு மற்றும் குருராஜா ஆகியோர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றதற்காகவும், மூன்று காமன்வெல்த் சாதனைகளை உடைத்து சாய்கோம் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனைகளால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.


ன்றைய தினம்

1.இன்று சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்(International Day of Sport for Development and Peace).
விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். அது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது. விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையையும் ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு