இந்தியா

1.திரிபுரா மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்துவந்த மாணிக் சர்க்கார், சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
2.மேற்கு வங்காளம் மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் உள்ள இந்திய பொறியல், அறிவியல், தொழில்நுட்ப பயிலகம் பிரணாப் முகர்ஜிக்கு இன்று மேலும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.சிறந்த வெளிநாட்டு படமாக சிலி நாட்டைச் சேர்ந்த எ பென்டாஸ்டிக் வுமன் தேர்வாகியுள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக கோகோவும், சிறந்த அனிமேஷன் குறும்படமாக டியர் பாஸ்கட்பால் படமும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்திற்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது கிடைத்திருக்கிறது. இதுதவிர, ஆடை வடிவமைப்புக்கான விருதை பாண்டம் த்ரெட் படமும், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை டார்க்கஸ்ட் ஹார் படமும் வென்றுள்ளன. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை ஐகரஸ் படம் பெற்றுள்ளது.சிறந்த துணை நடிகராக சாம் ராக்வெல்லும் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி), சிறந்த துணை நடிகையாக ஆலிசன் ஜேனியும் (ஐ, டோன்யா) ஆஸ்கர் விருதை பெற்றுள்ளனர். சிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் ஒலி இணைப்பு விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டங்கிர்க் படம் கைப்பற்றியது. சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் டங்கிர்க் படத்திற்கே கிடைத்துள்ளது.


இன்றைய தினம்

1.1982 – சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு