Current Affairs – 05 January 2018
இந்தியா
1.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள் தகுந்த வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும் என தேவசம்போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகம்
1.150 ஆண்டுகளுக்கு பின்னர் இம்மாதம் 31-ம் தேதி தோன்ற உள்ள ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம், 77 நிமிடங்கள் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
2.தன்னந்தனியே எவரெஸ்ட் சிகரம் மற்றும் மலையேற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
இன்றைய தினம்
1.1940 – பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது..
2.1971 – உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
–தென்னகம்.காம் செய்தி குழு