Current Affairs – 05 February 2018
இந்தியா
1.மும்பை விமான நிலையம் கடந்த மாதம் 20-ம் தேதி அன்று ஒரே நாளில் 980 விமானங்களை இயக்கி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளது.
உலகம்
1.சைப்ரஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிகோஸ் அனஸ்டசியடெஸ் அந்நாட்டின் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ளார்.
விளையாட்டு
1.மகளிர் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக சிட்னி சிக்ஸர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
2.டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் யூகி ஷீ சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பெய்வன் சங், இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
3.இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றுது. இதில் தென்ஆப்பிரிக்காவை 118 ரன்களுக்குள் சுருட்டியதன் மூலம் சொந்த மண்ணில் மிகவும் குறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சாஹல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இன்றைய தினம்
1.1960 – ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு