இந்தியா

1.சபரிமலை கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்று முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்து உள்ளது.
2.விபத்துகளை தடுப்பதற்காக, வரும் டிசம்பர் மாதத்திற்குள் இஸ்ரோ செயற்கைக்கோள் மூலமாக அனைத்து ரெயில் என்ஜின்களையும் இணைக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
3.தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க இனி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்க திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருகிற 20-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் திட்டம் வெளிநாட்டு பயணிகளுக்கு பொருந்தாது.
4.உலகம் முழுவதும் 2018 புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந்தேதி அன்று 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.


உலகம்

1.தரை மற்றும் ஆகாய மார்க்கமாக சென்று தாக்கும் கடற்படை ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.‘ஹர்பா’ என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ். ஹிம்மத் என்ற போர் கப்பலில் இருந்து ஏவப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


விளையாட்டு

1.ரியாத் நகரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.உலக கிளாசிக் செஸ் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், பிளிட்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார். ரஷியாவின் செர்கே கர்ஜாகின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று ஐசக் நியூட்டன் பிறந்த தினம் (Isaac Newton’s Birth Day).
ஐசக் நியூட்டன் 1643ஆம் ஆண்டு ஜனவரி 4இல் இங்கிலாந்து நாட்டில் உல்சுதோர்ப் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். ஈர்ப்புவிசை பற்றிய ஆய்வுகள்மூலம் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒரு­வராகக் கொண்டாடப்படுகிறார். இவரின் இயக்க விதியை நியூட்டன் விதி என்று அழைக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்பின்மூலம் அறிவியலில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு