உலகம்

1.விண்வெளியில் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின் மற்றும் ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகிய 2 வீரர்கள் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர்.இவர்கள் இருவரும் 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தனர். இந்திய நேரப்படி இரவு 9.04 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.17 மணிவரை நடந்தனர்.இதற்கு முன்பு 8 மணி 7 நிமிடம் விண்வெளியில் நடந்தது சாதனையாக இருந்தது.


விளையாட்டு

1.நியூசிலாந்தில் நடைபெற்ற U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.


இன்றைய தினம்

1.இன்று உலகப் புற்றுநோய் தினம் (World Cancer Day).
உலகளவில் புற்றுநோய் ஒழிப்பிற்கான ஒரு மாநாடு பாரிஸ் நகரில் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 4 இல் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் புற்றுநோயை ஒழிப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி, விழிப்புணர்வு மூலமாக புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சிகிச்சைமுறை போன்றவற்றை சமூகத்திற்கு போதிப்பது என்கின்ற குறிக்கோளின் அடிப்படையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு