இந்தியா

1.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி இரண்டாமிடமும், டெல்லி ஐ.ஐ.டி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.மேலாண்மை நிறுவனங்களை பொறுத்தவரை அகமதாபாத் ஐ.ஐ.எம் முதலிடமும், பெங்களூர் ஐ.ஐ.எம் இரண்டாமிடமும், கல்கத்தா ஐ.ஐ.எம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் முதலிடமும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை இரண்டாமிடமும், பணாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2.பொய்யான செய்திகளை உருவாக்கும் அல்லது வெளியிடும் பத்திரிக்கையாளர்களின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்ற ஆணையை பிரதமர் அலுவலகம் உத்தரவையடுத்து மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.
3.கொல்கத்தாவில் இருந்து வங்காள தேசம் டாக்கா இடையே ரெயில் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.இந்தியாவுக்கும், வங்காள தேசத்துக்கும் இடையே பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.சவுதி அரேபியாவில் துணைவரின் கைப்பேசியை உளவு பார்த்தால் அபராதத்துடன் சிறை தண்டனை வழங்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகளை கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 3-1 எனக்கைப்பற்றியது. 1970-க்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது கிடையாது. இந்த தொடரை வென்று 48 வருட சோகத்திற்கு முடிவு கட்டியுள்ளது.


ன்றைய தினம்

1.இன்று நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்(International Day for Land Mine Awareness and Assistance in Mine Action).
நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும். பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புரங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன. நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக் கூறவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு