Current Affairs – 03 March 2018
உலகம்
1.சவூதி அரேபியாவில் பெண்களுக்கு படிப்படியாக பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ராணுவத்தில் முதன்முறையாக பெண் பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
2.சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக துணை மந்திரி பதவியில் டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு
1.கிர்கிஸ்தான் நாட்டில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் வெள்ளிப்பதக்கம் வென்றார். 59 கிலோ பிரிஸ்டைல் எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான சங்கீதா போகட் வெண்கலப்பதக்கம் வென்றார். இப்போட்டியின் ஆண்களுக்கான கிரேக்கோ ரோமன் பிரிவின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராஜேந்தர் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல 82 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இன்றைய தினம்
1.1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
2.1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு