இந்தியா

1.வங்கிக்கடனைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2.துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராஜிந்தர் கண்ணா மற்றும் உல்பா இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதியாக ஏபி மாதுரை நியமித்து கேபினட் நியமன கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3.புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் 69,070 புதிய குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்துள்ளது.


உலகம்

1.விண்வெளியில் கண்டறியப்பட்ட நுண்ணுயிரியை முதல்முதலாக விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிற சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே சோதனை செய்து உறுதி செய்துள்ளனர்.


இன்றைய தினம்

1.1870 – புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
2.1947 – அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
3.1958 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
4.1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு