Current Affairs – 02 March 2018
உலகம்
1.அமெரிக்காவுக்கு இணையாக அனைத்து பிரமாண்ட உள்கட்டமைப்புகளை கட்டி வரும் துபாயில் உலகின் மிப்பெரிய ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது.
2.அமெரிக்காவில் உள்ள தனியார் விமான நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கி உள்ளது.ஸ்ட்ரடோலாஞ்ச் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 250 டன் எடை மற்றும் 117 மீட்டம் நீளம் கொண்டது. 6 மிகப்பெரிய என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 எரிபொருள் தொட்டி உள்ளது.
3.சீனாவில் மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என கூறி ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் ‘என் (N)’ என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இன்றைய தினம்
1.இன்று அலெக்சாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம்(Alexander Graham Bell Birth Anniversary Day).
கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் பிறந்தார். இவர் 1876ஆம் ஆண்டில் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். இவர் தனது கண்டுபிடிப்பிற்காக 600க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்திற்கு சென்று, வழக்குகளைச் சந்தித்து, வெற்றி பெற்ற பிறகே தொலைபேசிக்கான உரிமையைப் பெற்றார். இவரே பெல் தொலைபேசி நிறுவனத்தை நிறுவினார்.
–தென்னகம்.காம் செய்தி குழு