இந்தியா

1.கனடாவின் தேசிய கீதத்தில் உள்ள ஒருசில வார்த்தைகளை மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
2.வளர்ச்சியடையாத காதுகளை கொண்ட 5 குழந்தைகளுக்கு ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட புதிய காதுகளை பொருத்தி சீன விஞ்ஞானிகள் சாதனைப்படைத்துள்ளனர்.
3.ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
4.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் 3 ஆண்டுகளுக்கு ரெயில் போக்கு வரத்து நடைபெற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக ஈரநிலங்கள் தினம் (World Wetland Day).
பிப்ரவரி மாதம் 2 அன்று 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக ஒரு மாநாடு நடைபெற்றது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே பிப்ரவரி 2 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு