இந்தியா

1.ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 48மணி நேரத்துக்கு முன், ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் தகவல்தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
2.கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்கிற சரித்திரத்தை சித்தராமையா படைத்துள்ளார்.


ன்றைய தினம்

1.இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்(World Autism Awareness Day).
ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோய். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும்வகையில் ஆட்டிசம் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2.இன்று பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்(International Children’s Book Day).
இத்தினம் 1967ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது ஆன்சு கிறித்தியன்ஆண்டர்சன் என்னும் குழந்தை எழுத்தாளரின் பிறந்த நாள் (ஏப்ரல் 2, 1805) ஆகும். புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின்மீது கவனத்தை ஈர்த்தல் என்கிற நோக்கத்திற்காக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு