Current Affairs – 01 October 2019
தமிழகம்
1.திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி) மின்னணு துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் எஸ்.ராகவன். அவரது சாதனைகளைக் கருத்தில்கொண்டு, தில்லியில் உள்ள மின்னியல் மற்றும் தொலைத் தொடர்பியல் கழகத்தால் (ஐஇடிஇ) அவருக்கு ரஞ்சனா பால் நினைவு விருது மற்றும் சான்றிதழ் விருது வழங்கப்பட்டுள்ளது.
2.தினம் ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருள் விளக்கத்தை கூற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் வழக்குரைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா
1.நீதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017 -ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக் கல்வித் தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.அதேவேளையில் உத்தரப்பிரதேசம், பிகாா், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன..
2.எலக்ட்ரானிக் சிகரெட் (இ-சிகரெட்) ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய வா்த்தக அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
3.தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பா்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிஸாவின் பாலாசோா் மாவட்டம் சந்திப்பூா் கடல் பகுதியில் இந்தச் சோதனை நடைபெற்றது.நிலத்தில் இருந்தும் கப்பலில் இருந்தும் இந்த ஏவுகணையைச் செலுத்த முடியும். 290 கி.மீ. தொலைவு வரையுள்ள இலக்குகளை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.
வர்த்தகம்
1.பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) வாடிக்கையாளா் சந்திப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
2.நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, சிறியரக எஸ்-பிரெஸ்ஸோ சொகுசு காரை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு
2.கத்தாரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக ஜமைக்கா வீரா் உசேன் போல்டின் 11 தங்கப் பதக்க சாதனையை முறியடித்தாா் அமெரிக்காவின் ஓட்டப்பந்தய வீராங்கனை அலிஸன் பெலிக்ஸ்.
3.ஆா்ஜென்டீனாவின் பியுனோஸ் அயா்ஸ் நகரில் நடைபெற்ற பியுனோஸ் அயா்ஸ் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றாா் இந்திய நட்சத்திர வீரா் சுமித் நாகல்.
இன்றைய தினம்
1.இன்று உலக முதியோர் தினம்(International Day of Older Persons).
மருத்துவ வசதி மற்றும் கல்வி அறிவால் மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. முதியோர்களின் அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு பல திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. முதியோர்களின்மீது கவனம் செலுத்த உலக முதியோர் தினம் 1991ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
2.உலக சைவ தினம்(World Vegetarian Day).
தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை சைவ உணவு என்கிறோம். வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
– தென்னகம்.காம் செய்தி குழு