இந்தியா

1.ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் புத்தாண்டையொட்டி 30 அடி உயர ஜெகநாதர் சிற்பத்தை பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
2.2017-ம் ஆண்டின் கடைசி மன் கீ பாத் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி ‘புதிய இந்தியா’வை நோக்கிச் செல்வோம் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


உலகம்

1.உலகில் முதன்முதலாக நியூசிலாந்து இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.


இன்றைய தினம்

1.இன்று ஆங்கிலப் புத்தாண்டு (New Year).
ஜனவரி 1ஆம் நாள் கிரிகோரியன் (Gregorian) நாட்காட்டியின் முதல்நாள். கிரிகோரியன் நாட்காட்டியானது உலகளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஜனவரி 1 ஐ ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டம் முதன்முதலாக மெசபடோமியா (ஈராக்) நாட்டில் கி.மு. 2000 இல் தோன்றியது.
2.இன்று உலக குடும்ப தினம் (Global Family Day).
ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர். உலக முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம். நாட்டிற்கிடையே எந்த போரும், பொறாமையும் இன்றி வாழ வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு