இந்தியா

1.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குஜ்ஜார் இன மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 21% லிருந்து 26% ஆக உயரும்.
2.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வழங்கப்படும் குழந்தை பராமரிப்பு உதவித்தொகை ரூ. 1500லிருந்து ரூ.3000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
3.பாகிஸ்தான், வங்கதேச நாடுகளையொட்டி 6,300 கிமீ தூர எல்லையில் “விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு “(சிஐபிஎம்எஸ்) மூலம் கண்காணிக்க BSF முடிவு செய்துள்ளது.
4.காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.


உலகம்

1.ஜப்பான் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஜப்பானின் Hokkaido தீவில் ராணுவ பயிற்சியில் (Northern Viper 2017 Exercise) ஈடுபட்டு வருகின்றன.
2.இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதராக நிகோலே குட்ஷேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மலாலா, இங்கிலாந்தில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதர துறையை தேர்வு செய்து உள்ளார்.
4.ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பண்டைய வண்டல் பாறைகளை ஆய்வு செய்தனர்.
650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பரிணாமம் தொடங்கியது என்பதைக் கண்டறிந்து உள்ளனர்.
5.இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேபாளத்தில் உள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின் சார்பில் 30 ஆம்புலன்சுகளும், பஸ்களும் பரிசாக வழங்கப்பட்டது.


விளையாட்டு

1.19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக கொசு தினம் (World Mosquito Day).
உலகக் கொசு நாள் (World Mosquito Day), ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சர் ரொனால்டு ராஸ் 1987 ஆகஸ்ட் 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.இவர் தனது கண்டுபிடிப்பிற்கு பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகஸ்ட் 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு