நடப்பு நிகழ்வுகள் – 11 ஆகஸ்டு 2017
இந்தியா
1.மக்களவையில் நேற்று ஊதிய விதிகள் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.சம்பளம் மற்றும் போனஸ் விதிகள் பற்றிய 4 சட்டங்களில் இம்மசோதா மூலம் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளன.
2.வாகன காப்பீட்டு புதுப்பித்தலுக்கு இனி மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகம்
1.ஜப்பானில் கனா ஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர்.
விளையாட்டு
1.ஆஸ்திரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம்
1.1812 – இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.
2.1968 – பிரித்தானியாவில் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
– தென்னகம்.காம் செய்தி குழு