இந்தியா

1.இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் பற்றி சாமானிய மக்களும் கேட்டு அறிந்துகொள்ளும் விதமாக, இந்திய வெளியுறவுத்துறை சார்பில் ட்விட்டர் சமூக வலைத்தளம் வாயிலாக மக்களுடன் உரையாட #AsktheSpokesperson என்ற நிகழ்ச்சி துவக்கப்பட்டுள்ளது.
2.சர்வதேச அமைதி மாநாடு, மணிப்பூரின் இம்பால் நகரில் நடைபெற்றுள்ளது. இதில் தலாய் லாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
3.மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள விருந்தாவன் மற்றும் பர்சானா ( Vrindavan & Barsana ) நகரங்களை புனித யாத்திரை தலங்கள் என உ.பி. அரசு அறிவித்துள்ளது.
4.13வது ஐ.நா வனவிலங்கு மாநாடு 2020ல் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
5.இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வாஷிங்டனில் 11 வது வர்த்தக கொள்கை மன்றக் கூட்டத்தை நடத்தியுள்ளன.இதில் இந்தியா சார்பில் வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்துகொண்டுள்ளார்.
6.L &T நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட OPV விக்ரம் ரோந்து கப்பல், இந்திய கடலோர காவல் படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
7.இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு, இரான் நாட்டில் உள்ள சபஹார் துறைமுகம் வழியாக முதல்முறையாக கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கு கப்பல் அனுப்பப்பட்டுள்ளது.


உலகம்

1.இலங்கை தலைநகர் கொழும்புவில் 14வது சார்க் சட்ட வல்லுனர்கள் மாநாடு மற்றும் 11வது சார்க் தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற்றுள்ளது.
2.சீனாவின் குவாங்க்சூவில் உள்ள இந்திய துணை தூதரகம் சாபில், இந்தியா சுற்றுலாவை பெருக்குவதற்கான மாநாடு Sanya நகரில் நடைபெற்றுள்ளது.


இன்றைய தினம்

1.1889 – மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு