இந்தியா

1.பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் BSNL நிறுவனம் இணைந்து ஸ்பீட்பே (Speedpay) எனும் கைப்பேசி பணப்பை (mobile wallet) சேவையை தொடங்கியுள்ளன.
2.DRDO மற்றும் இந்திய விமானப்படை இணைந்து உருவாக்கிய ஆஸ்ட்ரா ஏவுகணை, ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் ஆளில்லா தாக்குதல் விமானம் மூலம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இது குறைந்த இலக்கான 20 KM மற்றும் தொலைவு இலக்கான 80 – 110 KM அளவில் சோதிக்கப்பட்டுள்ளது.
3.சஷஸ்திரா சீமா பால் ( SSB ) படைப்பிரிவின் சார்பிலான முதல் புலனாய்வு / நுண்ணறிவு பிரிவை உள்துறை அமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.அனைத்து ஆயுதப்படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள் படை வீரர்களுக்காக WARB எனப்படும் செயலியையும் உள்துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்.( WARB app — Welfare and Rehabilitation Board app ).
4.சுதந்திர போராட்ட தியாகிகள் பிறந்த கிராமங்களை மேம்படுத்த Shaheed Gram Vikas Yojana என்னும் திட்டத்தை ஜார்கண்ட் அரசு அறிமுகம் செய்துள்ளது.இத்திட்டம் முதலாவதாக பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா ( Birsa Munda ) பிறந்த கிராமமான Ulihatuவில் பிஜேபி அகில இந்திய தலைவர் அமித்ஷா துவக்கி வைத்துள்ளார்.
5.இந்தியா ஜப்பானுடன் திறந்த வான்வெளி ஒப்பந்தம் ( Open Skies Agreement ) ஏற்படுத்தியுள்ளது.
6.உத்தரகாண்ட் மாநில தூய்மை இந்தியா திட்ட தூதராக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7.M.S. சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறை ஒன்றும் இல்லை – MS இசை வாழ்வு என்ற தலைப்பிலான கண்காட்சியை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டெல்லியில் துவக்கி வைத்துள்ளார்.
மேலும் ரூ.100 மற்றும் ரூ.10 மதிப்பிலான நினைவு நாணயங்களையும் துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
8.அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு குழுவின் தலைவராக பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற நீதிபதி R.M.லோதா பணி விலகியுள்ளார். இக்குழுவில் கான்பூர் IIT இயக்குநராக பணிபுரிந்த பேராசிரியர் K. அனந்த பத்நாபன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


உலகம்

1.லண்டனில் அமைந்துள்ள சர்வதேச முட்டை கமிசனின் துணைத் தலைவராக தெலுங்கானாவைச் சேர்ந்த சுரேஷ் சிட்டூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
2.ஜப்பான் அஞ்சல் துறை , அந்நாட்டில் யோகா கலையை வளர்க்க பாடுபட்ட கொல்கத்தாவைச் சேர்ந்த பிஷ்னு சரண் கோஷ் , அவரின் மகன் பிஸ்வநாத் கோஷ் , மகள் கருணா கோஷ் மற்றும் கருணா கோஷின் மாமனார் அஷூதோஷ் கோஷ் ஆகியோர் அடங்கிய தபால்தலையை வெளியிட்டுள்ளது.
3.அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு இணைந்து அபுதாபியில் Iron Union – 5 என்ற கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.


இன்றைய தினம்

1.இன்று உலக சுற்றுலா தினம் (World Tourism Day).
பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் மற்றும் சமுதாய ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் உலக சுற்றுலா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு செப்டம்பர் 27ஐ உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. இத்தினம் 1980ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் சுற்றுலா துறைகள் அதிகம் லாபம் ஈட்டும் துறையாக மாறியுள்ளன.
2.1825 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.
3.1998 – கூகிள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு