வர்த்தகம்

1.பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 78 சதவீதம் சரிந்து ரூ.83 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.373 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. போட்டி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச கட்டண குறைப்பு காரணமாக நிகர லாபம் கடுமையாக சரிந்துள்ளது.
2.டாடா குழுமத்தின் சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் பிரிவின் தலைவராக வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

1.இன்று உலக அறிவுசார் சொத்துரிமை தினம்(World Intellectual Property Day).
அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 1970-ம் ஆண்டு ஏப்ரல் 26-ல் உருவாக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு