இந்தியா

1.வளரிளம் பருவத்தினருக்கான ஆரோக்கியம் பற்றிய உலக மாநாடு , அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.இதன் கருப்பொருள் Investing in Adolescent Health the Future is Now ஆகும்.
2.ராமாயண கடவுள் ராமனின் பல்வேறு வாழ்வியியல் சம்பவங்களை கூறும் வகையில் ரூ.5 மற்றும் ரூ.15 மதிப்பிலான நினைவு தபால்தலைகளை பிரதமர் மோடி, வரணாசியில் உள்ள துளசி மனஸ் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.
3.தெலுங்கானா மாநில அரசின் பல்வேறு துறைகள், தேசிய பேரிடர் மீட்பு துறை மற்றும் மத்திய ஆயுதப்படைகள் இணைந்த பேரிடர் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் ஒத்திகை Pralay Sahayam செகந்திராபாத்தில் நடைபெற்றுள்ளது.
4.சரியான போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் உள்ள கர்பிணிப் பெண்கள், தங்களின் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்வதற்கு, வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்வதற்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கிடும் சம்பூர்ணா யோஜனா எனும் திட்டத்தை ஒடிஷா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
5.கூர்க்காலந்து தன்னாட்சி நிர்வாக தலைவராக Binay Tamang , துணைத்தலைவராக Anit Thapa மற்றும் 6 பேரை உறுப்பினர்களாக நியமித்து மேற்கு வங்காள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
6.30 ஆண்டுகளுக்கு பின் மிசோரம் அமைச்சரவையில் பெண் ஒருவர் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
1987ல் முதன்முறையாக Lalhlimpuii Hmar அமைச்சராக பதவி வகித்துள்ளார்.தற்போது 2017ல் Vanlalawmpuii Chawngthu என்ற பெண்மணி துணை அமைச்சராக ( Minister of State ) பதவியேற்றுள்ளார்.
7.குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள காண்ட்லா துறைமுகம், தீனதயாள் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
8.பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோராக்கும் நோக்கில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ( பஞ்சாப், இமாசலப் பிரதேசம், திரிபுரா, பாட்னா, கோவா, தமிழ்நாடு ) மண்டல மகளிர் தொழில் பயிற்சி மையங்கள் ( RVTI ) உருவாக்கப்படும் என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


உலகம்

1.துருக்கி மற்றும் 9 NATO நாடுகள் இணைந்து Dynamic Monarch என்ற கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
2.துபாயைச் சேர்ந்த Etihad விமான நிறுவனம் Fly Now and Pay Later என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி பயணம் செய்த பின் தவணை மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.


இன்றைய தினம்

1.இன்று உலக வனவிலங்குகள் தினம் (World Animal Day).
உலக வனவிலங்குகள் தினம் முதன்முதலாக இங்கிலாந்து நாட்டில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 4 இல் கொண்டாடப்பட்டது. காட்டு விலங்குகளை அழியாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்கிற உறுதிமொழியை மக்களை எடுக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம் அழியும் தருவாயில் உள்ள விலங்குகளை பாதுகாக்கலாம்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு