இந்தியா

1.அருணாச்சல பிரதேசத்தின் 23வது மாவட்டமாக காம்லே ( Kamle ) உருவாக்க அம்மாநில சட்டப்பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.ராணுவ வீரர்கள் , பொதுமக்கள் இடையே நல்லுறவை வளர்க்க ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவின் சார்பில் Jashn – e – Breng என்ற நிகழ்ச்சி காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முழக்கம் – Jawan aur Awaam Amun Hai Muqam ( Army and Locals together, peace will prevail )
3.கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சட்டீஸ்கர் Kanger Ghati தேசிய பூங்காவில், உயிரியல் ஆய்வாளர்கள் புதிய வகை பல்லி இனத்தை கண்டறிந்துள்ளனர்.இதற்கு Kanger valley rock gecko என பெயரிட்டுள்ளனர். இதன் உயிரியல் பெயர் – Hemidactylus kangerensis.
4.எல்லை பாதுகாப்பு படை சார்பில் Run For Martyrs – தியாகிகளுக்காக ஓட்டம் என்ற பாதி மராத்தான் ( Half Marathon ) போட்டி அக்டோபர் 22ல் புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது.
5.மத்திய திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் இந்தியாவின் முதல் பிரதம மந்திரி கவுசல் கேந்திரா { Pradhan Mantri Kaushal Kendra — PMKK } புதுடெல்லியில் துவங்கப்பட்டுள்ளது.
6.ராஜ்யசாபா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியரை ( Editor in Chief ) தேர்வு செய்ய, பிரசார் பாரதி தலைவர் A. சூர்யபிரகாஷ் தலைமையில் கமிட்டி அமைத்து ராஜ்யசாபா செயலகம் உத்தரவிட்டுள்ளது.
7.பணியின் போது உயிரிழக்கும் காவல்துறையினர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தி உ.பி. முதல்வர் அறிவித்துள்ளார்.
8.மத்திய குடிநீர் மற்றும் துப்பரவுத்துறை , தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பொருட்டு , ஊரகப் பகுதிகளில் கழிவறைகள் அமைக்கும் வீடுகளை ஹிந்தி பேசும் மாநிலங்களில் Izat Ghar எனவும், ஹிந்தி பேசாத மாநிலங்கள் House Of Dignity – கண்ணியமான / மரியாதையான குடும்பம் என பொருள்படும்படியாக பெயரிட வேண்டி மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.


உலகம்

1.புகழ் பெற்ற பிளேபாய் (Play boy ) இதழின் 64 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக பிரான்ஸை சேர்ந்த Ines Rau என்ற திருநங்கை நடுப்பக்க அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1969 – வால் மார்ட் தொடங்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு