இந்தியா

1.மாணவர் சேர்க்கை குறைந்த மற்றும் சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் – பொதுத்துறை கூட்டு (PPP) என்ற திட்டத்தின் கீழ் தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசுக்கு நிதிஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
2.விளையாட்டு துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக ரிலையன்ஸ் பவுண்டேசன்க்கு, ராஷ்டிரிய கேல் புரோட்ஷகன் விருது ( Rashtriya Khel Protsahan Award ) வழங்கப்பட்டுள்ளது.
3.புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா சுற்றுலா துறையின் சார்பில் தங்க ரத சொகுசு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4.சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில் குடியிருப்புகள் , அரசு அலுவலகங்களுக்கு இடையே இந்தியாவிலேயே முதன்மையாக 19 ஏக்கர் பரப்பளவில் குறுங்காடுகள் (India’s First Micro Forest in Raipur) உருவாக்கப்பட்டுள்ளது.
5.ஜிஎஸ்டி வரி மூலம் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ92,283 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 72.33 லட்சம் பேர் ஆவார்.


உலகம்

1.ஊடக துறையில் பணியாற்றுபவர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு புகட்ட டிவிட்டர் நிறுவனம் TweetToTheTop என்ற பயிற்சியை வழங்க இருக்கிறது.
2.புவிஅறிவியல் துறையின் கீழ் செயல்படும் Indian National Centre for Ocean Information Services (INCOIS) சார்பில் காம்ரோஸ் , மடகாஸ்கர் மற்றும் மொஸாம்பிக் ஆகிய நாடுகளில் பெருங்கடல் முன்னெச்சரிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இதே போன்று மாலத்தீவுகள், இலங்கை மற்றும் ஷிஷெல்ஸ் ஆகிய நாடுகளில் இந்தியா சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
3.இரண்டாவது இந்திய பெருங்கடல் மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது.இதன் கருப்பொருள்.- peace, progress and prosperity ஆகும்.இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார்.முதல் மாநாடு 2016ல் சிங்கப்பூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
4.தைவான் முதன்முறையாக உள்நாட்டு கண்காணிப்புக்காக Formosat – 5 என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது.


விளையாட்டு

1.ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற பெருமையை தேவேந்திர ஜக்காரியா பெற்றுள்ளார்.இவர் 2004 ஏதென்ஸ் மற்றும் 2016 ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் F46 ஈட்டி எறிதலில் இரண்டு தங்கம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம் (International Vulture Awareness Day).
உலகளவில் 23 பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இந்தியாவில் 9 வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இக்கழுகு இனங்கள் உலகளவில் விரைவாக அழிந்து வருகின்றன. டைகுளோபினாக் மருந்தை சாப்பிட்ட கால்நடைகள இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்தக் கால் நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுகின்றன. இவ்வினத்தைப் பாதுகாக்க இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2.இன்று சர்வதேச தேங்காய் தினம் (International Coconut Day).
ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு