இந்தியா

1.உத்திரப்பிரதேச அரசு வெளியிட்ட முக்கிய சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
2.உலக வங்கி மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டங்களுடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம் புதுடெல்லியில் சர்வதேச வனவிலங்கு திட்ட மாநாட்டை நடத்தியுள்ளது.இதன் கருப்பொருள் — People’s Participation in Wildlife Conservation ஆகும்.
3.ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
4.நமாமி கங்கை திட்டத்தின் கீழ் அலகாபத்தில் திரிவேணி சங்கமம் ( கங்கை, யமுனை , சரஸ்வதி சங்கமிக்கும் இடம் ) பகுதியில் ஆமைகள் சரணாலயம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5.பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தாற்காலிக துணை வேந்தராக நீரஜ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே துணை வேந்தராக பணியில் இருந்த கிரிஷ் சந்திர திரிபாதி விடுமுறையில் சென்றுள்ளதால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6.மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் 1.8 மீட்டர் உயரமுள்ள, காந்தியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை துணை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் Be the Change You Wish to See என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
7.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய சேர்மனாக ரஜினிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது அப்பதவியில் இருக்கும் அருந்ததி பட்டாச்சார்யா அக்டோபர் 07ல் ஓய்வு பெற்றார்.


உலகம்

1.ஜெர்மனி, ஜப்பான், கனடா மற்றும் மாலத் தீவுகளில் அகில இந்திய வானொலி தனது சேவையை வழங்க உள்ளது.
2.ஐக்கிய அரபு எமிரேட்டில் அக்டோபர் 01 / 2017 முதல் சிகரட் , புகையிலை மற்றும் குளிர்பானங்களுக்கு பாவ வரி விதிக்கப்பட்டுள்ளது.புகையிலை, சிகரட், ஆற்றல் பானங்களுக்கு ( energy drinks ) 100 % பாவ வரியும்,
குளிர் பானங்களுக்கு 50 % பாவ வரி விதிக்கப்பட்டுள்ளது.
3.கனடா நாட்டின் புதிய ஜனநாயக கட்சியின் (என்.டி.பி) தலைவராக ஜக்மீத் சிங் என்ற சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.தாஷ்கண்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 5 வயது குழந்தைக்கு தாயான உக்ரைன் வீராங்கனை Kateryna Bondarenko பட்டம் வென்றுள்ளார்.இதற்கு முன் 2011 ஆஸ்திரேலியா ஓபனில் ஒரு குழந்தைக்கு தாயான கிம் கிலிஸ்டர்ஸ் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு