நடப்பு நிகழ்வுகள் – 14 ஆகஸ்டு 2017
தமிழகம்
1.இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் யானை மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா
1.ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்எல்டி) கட்சியின் தேசியத் துணைத் தலைவராக அக்கட்சித் தலைவர் அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌதரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.பஞ்சாப் மாநிலம், அட்டாரி-வாகா எல்லை பகுதியில் நாட்டிலேயே மிக உயரமான 360 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
உலகம்
1.யூ டியூப்புக்கு போட்டியாக வாட்ச் என்ற பெயரில் வீடியோ வெளியிடும் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.அமெரிக்காவில் முதல் முறையாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2.பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி அட்டாரி-வாகா எல்லை அருகே 400 அடி உயர கொடிக்கம்பம் பறக்கப்படப்பட்டது.தெற்காசியாவில் பறக்கவிடப்பட்டுள்ள மிக உயரமான கொடிக்கம்பம் இதுவாகும். உலகில் 8-வது உயரமான கொடிக்கம்பம் இதுவாகும்.
இன்றைய தினம்
1.1908 – முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் நடைபெற்றது.
– தென்னகம்.காம் செய்தி குழு