தமிழகம்

1.முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு ஆணை பிறபித்துள்ளது.


இந்தியா

1.மொபைல் போனின் IMEI எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
2.நாட்டின் மூன்றாவது பெரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் தோனியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
3.கேரளாவின் முதல் பெண் காவல் தலைமை இயக்குநராக ( DGP ) R. ஶ்ரீலேகா IPS நியமிக்கப்பட்டுள்ளார்.
1987ல் கேரளாவில் இருந்து தேர்வு பெற்ற முதல் பெண் IPS என்ற பெருமை பெற்றவர் இவர்.
4.பொருளாதார விவகார ஆலோசனை குழுவின் தலைவராக , நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தோப்ராயை நியமனம் செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
5.மும்பை அரபிக்கடல் பகுதியில் ONGC சார்பில் புதிதாக WO – 24 – 3 என்ற எண்ணெய் வயலை கண்டுபிடித்துள்ளனர். இதில் 20 மில்லியன் டன் எண்ணைய் வளம் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.


உலகம்

1.ஜெர்மன் அதிபர் தேர்தலில் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம் ஏஞ்சலா மெர்கல் 4வது முறையாக ஜெர்மனி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2.அமெரிக்காவின் ஹவாய் தீவில் 5th Pacific Air Chiefs Symposium எனும் மாநாடு நடைபெற்றுள்ளது.இதில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 22 நாடுகளின் விமானப்படை தளபதிகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்தியா சார்பில் ஏர் சீப் மார்ஷல் பீரேந்திர சிங் தனோவா கலந்துள்ளார்.
3.61வது வருடாந்திர , சர்வதேச அணுசக்தி முகமையின் கூட்டம் ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் நடைபெற்றுள்ளது.இந்தியா சார்பில் அணுசக்தி கமிசன் தலைவர் டாக்டர். சேகர் பாசு கலந்து கொண்டுள்ளார்.
4.இலங்கையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி மையத்தை தரம் உயர்த்தி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.


இன்றைய தினம்

1.1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு