தமிழகம்

1.காச நோய் இல்லாத சென்னையை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், REACH தன்னார்வ தொண்டு நிறுவனம், USAID, Stop TB Partnership என்ற சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்தியா

1.திருவில்லா அருகே உள்ள முள்ள மணப்புரம் சிவன் கோயிலில் கேரள மாநில முதல் தலித் அட்சகராக யது கிருஷ்ணன் என்பவர் தனது அட்சகர் பணியை தொடங்கியுள்ளார்.
2.பெங்களூர் சர்வதேச விமானநிலையம் அடுத்த ஆண்டு டிசம்பர் முதல் முழுவதுமாக ஆதார் எண்ணின் அடிப்படையில் இயங்கும் என பெங்களூர் சர்வதேச விமானநிலைய லிமிடெட் தெரிவித்துள்ளது.
3.வடகிழக்கு மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் மாநாடு , மணிப்பூரின் இம்பால் நகரில் நடைபெற்றுள்ளது. இதனை மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் துவக்கி வைத்துள்ளார்.


உலகம்

1.2017 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ரிச்சர்ட் எச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.தாலர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் நடத்தை அறிவியல் மற்றும் பொருளாதாரத்தின் பேராசிரியராக உள்ளார்.
2.போலந்தைச் சேர்ந்த The only one foundation அமைப்பு , முதல் சக்கர நாற்காலி உலக அழகிப் போட்டியை வார்ஷா நகரில் நடத்தியுள்ளது.பெலாரஸ் நாட்டின் Aleksandra Chichikova பட்டம் வென்றுள்ளார்.
3.போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.


விளையாட்டு

1.அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் நடைபெற்ற இளையோர் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் , இந்தியாவின் ஜெம்சன் நிங்தவுஜம் , அங்கிதா பகத் ஜோடி தங்க பதக்கம் வென்றுள்ளது.


இன்றைய தினம்

1.1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
2.1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
3.1991 – நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு