இந்தியா

1.கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை 17-வது முதல்வராக பதவி வகித்த தரம் சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
2.பீகார் முதல்வர் பொறுப்பில் இருந்து ஜூலை 26ல் ராஜினாமா செய்த நிதிஷ்குமார்., நேற்று (ஜூலை 27) மீண்டும் பீகார் மாநில முதல்வராக பதவியேற்றுள்ளார்.அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் சுசில்குமார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
3.போலியோ நோய்க்கு எதிரான விழிப்புணர்வு தூதராக பணியாற்றி வரும் அமிதாப்பச்சன் , மேலும் இரண்டு வருடங்களுக்கு செயல்படுவார் என யூனிசெப் அறிவித்துள்ளது.
4.புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் யஷ்பால் சிங் காலமானார்.இவர் பத்மஶ்ரீ மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் மற்றும் யுனொஸ்கோ அமைப்பின் கலிங்கா பரிசு பெற்றவர் ஆவார்.


உலகம்

1.20 ஆண்டுகளுக்கு பின் ஸ்வீடன் முதன்முறையாக NATO நாடுகளுடன் இணைந்து செப்டம்பரில், Aurora – 17 என்ற ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது.
2.இளவரசி டயானா விபத்தில் இறந்து 20-வது ஆண்டு நினைவு தினம் அடுத்த மாதம் வரவுள்ளது.தற்போது, இளவரசி டயானா தொடர்பாக புதிய டாகுமெண்ட்ரி படம் ” டயானா, எங்கள் தாயார்: அவரது வாழ்வும் மரபும் ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.காத்மாண்டுவில் நடைபெற்ற Asian Youth and Junior Weightlifting Championships போட்டியில், மணிப்பூரைச் சேர்ந்த கொன்சம் ஊர்மிளா தேவி (Konsam Ormila Devi) தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


சிறப்பு செய்திகள்

அஸ்ஸாம் மாநில விவசாய தியாகிகள் தினம் – ஜனவரி 27.
சர்வதேச அரிய நோய்களின் தினம் – பிப்ரவரி 28.
சர்வதேச பூஜ்ய பாகுபாடு தினம் – மார்ச் 01.
உலக கேட்டல் தினம் & உலக வனவிலங்கு தினம் – மார்ச் 03.
தபால்துறை குறைதீர்ப்பு தினம் – மார்ச் 15.
உலக மகிழ்ச்சி தினம் & உலக சிட்டுக்குருவி தினம் – மார்ச் 20.
உலக வன தினம் – மார்ச் 21.
உலக குடிநீர் தினம் – மார்ச் 22.
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் – மே 24.
மாதவிடாய் சுகாதார நாள் – மே 28.
உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 05.
இந்திய விவசாய பெண்கள் தினம் – அக்டோபர் 15.
வேளாண் கல்வி தினம் (டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்) – டிசம்பர் 03.


இன்றைய தினம்

1.இன்று உலக கல்லீரல் விழிப்புணர்வு தினம் (World Hepatities Day).
கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைடிஸ் A வைரஸால் 1.5 மில்லியன், ஹெபடைடிஸ் B வைரஸால் 2 பில்லியன் மற்றும் ஹெபடைடிஸ் C வைரஸால் 150 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day).
உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
3.1586 – முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு