Tmail-Nadu-SSLC-Results-2016

தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவகுமார், மற்றும் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், 50 பேர் 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர். 224 பேர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.

இதில் மொழிப்பாடத்தில் 73 பேர் 100-க்கு 100 எடுத்துள்ளனர். கணிதத்தில் 18,754 பேர் முழு மதிப்பெண்ணான 100 க்கு 100 எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 51 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அறிவியலில் 18,642 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 39,398 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்10 ஆம் வகுப்பு தேர்வில் 93.6 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் வருமாறு:
1. கன்னியாகுமரி– 98.17
2. திருநெல்வேலி- 95.3
3. தூத்துக்குடி– 96.93
4. ராமநாதபுரம் – 97.1
5. சிவகங்கை – 96.66
6. விருதுநகர் – 97.81
7. தேனி – 96.57
8. மதுரை – 95.68
9. திண்டுக்கல் – 92.57
10. ஊட்டி – 93.25
11. திருப்பூர் – 95.62
12. கோவை – 96.22
13. ஈரோடு – 98.48
14. சேலம் – 94.21
15. நாமக்கல் – 96
16. கிருஷ்ணகிரி – 95.05
17. தர்மபுரி – 94.77
18. புதுக்கோட்டை – 94.46
19. கரூர் – 96.67
2-0. அரியலூர் – 92.52
21. பெரம்பலூர் – 96.52
22. திருச்சி – 95.92
23. நாகப்பட்டினம்- 89.43
24. திருவாரூர் – 89.33
25. தஞ்சாவூர் – 95.39
26. பாண்டிசேரி – 92.42
27. விழுப்புரம் – 88.07
28. கூடலூர் – 89.13
29. திருவண்ணாமலை- 89.03
30. வேலூர் – 86.49
31. காஞ்சீபுரம் – 92.77
32. திருவள்ளூர் – 90.84
33. சென்னை – 94.25.