இந்தியா

1.முப்படைகளின் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு  ஜனவரி 21-ல் உத்ரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடைபெற்றது. பிரதமர் மோடி இம்மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார்.
2.புதுடெல்லியில் நீர் மேலாண்மையில் உள்ள பல்வேறு இடர்களை களைவது பற்றிய கலந்துரையாடல் கூட்டம் Jal Manthan – 3 நடைபெற்று முடிந்துள்ளது.
3.இந்திய பெருங்கடல் அமைப்பு நாடுகளுக்கு இடையிலான , சிறு மற்றும் குறுந்தொழில் புரிந்துணர்வு கூட்டம் புதுடெல்லியில் ஜனவரி 19 முதல் ஜனவரி 21 வரை நடைபெற்றது.
4.முதன்முறையாக INS விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் ATM வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .


உலகம்

1.22 ஆண்டுகள் பதவியில் இருந்த காம்பியா அதிபர் யாகியா ஜம்மே அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து  நாட்டை விட்டு வெளியேறி  அண்டை நாடான கினியாவுக்கு தனது மனைவியுடன் விமானத்தில் சென்றடைந்தார்.


விளையாட்டு

1.இந்திய அணியின் விராட் கோலி கேப்டனாக இருந்து வெறும் 17 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.இவர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுவில்லியர்ஸ் சாதனையை  முறியடித்துள்ளார். டிவில்லியர்ஸ் 18 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
2.3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பறியுள்ளது.இந்தியாவின் கேதர் யாதவ் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.
3.மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ  சோசுவாங்கை வீழ்த்தி சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தை கைப்பறியுள்ளார்.இந்த போட்டி நேற்று நடைபெற்றது.இது சாய்னாவின் 23-வது சாம்பியன் பட்டமாகும்.


இன்றைய தினம்

1.சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் 23 ஜனவரி 1957.
2.இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 23 ஜனவரி 1897.
3.ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் 23 ஜனவரி 1789.
4.ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியான நாள் 23 ஜனவரி 1996.

 

– தென்னகம்.காம் செய்தி குழு