இந்தியா

1.என்.டி.ராமாராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கவேண்டும் என்று கோரி தெலுங்கு தேச கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2.பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார்(78) இன்று காலை காலமானார்.
3.பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் தாசரி நாராயணராவ்(74) நேற்று ஹைதராபாத்தில் காலமானார்.


வர்த்தகம்

1.கரூர் வைஸ்யா வங்கி சென்னை மந்தவெளியில் 715-ஆவது புதிய கிளையை திறந்துள்ளது.சென்னை மாநகரில் இது  42 ஆவது கிளையாகும்.


உலகம்

1.இலங்கையில் வரலாறு காணாத கனமழை,  பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன் இந்திய போர்க் கப்பல் கொழும்பு சென்றடைந்துள்ளது.


விளையாட்டு

1.சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் சீனாவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து தென் கொரியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.இன்று உலகப்புகையிலை ஒழிப்பு தினம் (World No – Tobacco Day).
புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஒரு போதைப்பொருளாகும். ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். புகையிலையில் 28 வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31 அன்று கொண்டாடப்படுகிறது.
2.தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்ட நாள் 31 மே 1910.
3.டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்ட நாள் 31 மே 1911.

 

– தென்னகம்.காம் செய்தி குழு