current-affairs

இந்தியா

1.மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயததை 65 ஆக உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒப்புதல் அளித்தார்.மோடி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இன்று முதல் அத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
2.வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை எடுக்க வருமான வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த சலுகை நாளை(ஜூன்1) முதல் அமலாக உள்ளது.
3.இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்.உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

உலகம்

1.டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் நடைபெற்ற நாள் 31 மே 1911.

விளையாட்டு

1.இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்  10,000 ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.10,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீர்ர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.இந்த சாதனையை 127 டெஸ்டில் பங்கேற்று 31 வயது 5 மாதத்தில் அலெஸ்டர் குக் புரிந்துள்ளார்