தமிழகம்

1.அதிக மகசூல் தரும் புதிய ரக பீன்ஸை உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கு ஊட்டி – 3 என பெயரிட்டுள்ளனர்.


இந்தியா

1.இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், நேபாள ராணுவ கவுரவ ஜெனரலாக அந்நாட்டின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக
“கோவிந்தா திருமலா திருப்பதி தேவஸ்தானம்” என்ற செயலியை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
3.பொதுமக்கள் தங்களிடம் உள்ள நகைகளை நகைக்கடைகளில் சென்று விற்பனை செய்யும் போது ரூபாய் 20,000/ வரை ரொக்கமாக பணம் பெற்று கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. தற்போது இது ரூபாய் 10, 000/ ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4.நாடு முழுவதும் 20வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணி ஜூலை 15 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறவுள்ளது. கடைசியாக 2012ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.


விளையாட்டு

1. தாய்லாந்தில் 4வது ஆசிய புட்வாலி சாம்பியன் போட்டி ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெறுகிறது.


சிறப்பு செய்திகள்

GST தொடர்பான 4 மசோதாக்கள் மக்களவையில் மார்ச் 29ல் நிறைவேறியுள்ளது.
01) CGST – உற்பத்தி வரி, சேவை வரி & கூடுதல் சுங்க வரிகளுக்கு பதிலாக ஒரே வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா.
02) IGST – மாநிலங்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும் பொருட்களுக்கு, மத்திய அரசு வரி விதிக்க வகை செய்யும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா.
03) UTGST – சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களில் ( சண்டிகர், டாமன் டையூ ) மத்திய அரசு வரி விதிக்க வகை செய்யும் யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி மசோதா.
04) GST ( Compensation to states ) – GST அமல்படுத்தப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ” வரி மேலி வரி ” ( செஸ் ) விதிக்க வகைசெய்யும் சரக்கு மற்றும் சேவை வரி ( இழப்பீடு ) மசோதா.


இன்றைய தினம்

1.ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள் 31 மார்ச் 1889.
2.ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 31 மார்ச் 1918.
3.திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரிய நாள் 31 மார்ச் 1959.
4.சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்ட நாள் 31 மார்ச் 1966.
5.12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்த நாள் 31 மார்ச் 1970.
6.இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்ட நாள் 31 மார்ச் 1990.
7.கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்த  நாள் 31 மார்ச் 2004.

 

– தென்னகம்.காம் செய்தி குழு