தமிழகம்

1.1876-க் குப் பிறகு தமிழகத்தின் மழை அளவு தற்போது  62% தட்டுப்பாட்டுடன் வரலாறு காணாத வறட்சியை சந்தித்துள்ளது.
2.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


இந்தியா

1.டெல்லி புதிய துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவியேற்றுக்கொண்டார்.நஜீப் ஜங் ராஜினாமாவைத் தொடர்ந்து,அனில் பைஜால்  இன்று பதவியேற்றார்.
2.அலைபேசி வழியிலான பணபரிவர்த்தனைகளுக்கு BHIM (Bharat Interface for Money ) என்ற செயலியை பிரதமர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஒருமுறைக்கு 10,000 ரூபாய் பரிமாற்றம் செய்யலாம். ஒரு நாளுக்குள் அதிகபட்மாக 20,000வரை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
3.தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள்  தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிகள் மூலம் தருவதைக் கட்டாயமாக்கும் சட்ட மசோதாவிற்கு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
4.மார்ச் 31-ம்தேதிக்கு பிறகு பழைய 500,1000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால், அபராதம் விதிக்கப்படும் அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருக்கிறார்.


உலகம்

1.உலகில் முதல் 2017-ம் ஆண்டு சமோவா ,டோன்கா,கிறித்மாடி தீவுகளில் பிறந்தது.இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு இந்த தீவுகளில் இரவு 12 மணியானது.
2.ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை, அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பாராக் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில்  தலையிட்டு அரசியல் தலைவர்களின்  மின்னஞ்சல்களை ஹேக் செய்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதத்துடன்  அந்நாட்டு உளவுதுறை மேற்கொண்டுள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கையை அதிபர் பாராக் ஒபாமா எடுத்துள்ளார்.
3.ஹாங்காங்கின் உயிரியல் பூங்காவில் உலகின் மிகவும் வயதான ஆண் பாண்டாக்கரடி பான்-பான் (31), தற்போது உயிரிழந்துள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ஹாங்காங்கில் ஜியா-ஜியா என்ற வயதான ஆண் பாண்டாக்கரடி(38) உயிரிழந்தது. மூன்று மாதங்களில் இரண்டு வயதான ஆண் பாண்டாக்கரடி  ஹாங்காங்கில் உயிரிழந்துள்ளன.
4.மியான்மர் அரசு கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்போருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய வரைவுச் சட்டத்தை உருவாக்கியுள்ளது.


விளையாட்டு

1.2022ல் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு போட்டிகள் மேகாலயாவில் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் 2022-ம் ஆண்டு  மேகாலயா உருவானதின் 50ம் ஆண்டு ஆகும்.
2.2016ம் ஆண்டின், ஐரோப்பாவின் சிறந்த விளையாட்டு வீரராக 27 செய்தி நிறுவனங்கள் இணைந்து போர்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோவை தேர்வு செய்துள்ளனர்.இவர் ஏற்கனவே ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதையும் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தாமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்ட நாள் 31 டிசம்பர் 1879.
2.இன்று தமிழக எழுத்தாளரும் தமிழறிஞருமான ச. வே. சுப்பிரமணியன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 31 டிசம்பர் 1929.

 

– தென்னகம்.காம் செய்தி குழு