தமிழகம்

1.மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக 2014-ம் ஆண்டுக்கான மாநில விருது அப்போதைய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலத்துக்கும்,2015-ம் ஆண்டுக்கான மாநில விருது அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் த.பொ.ராஜேஷ் மற்றும் அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியத்துக்கும்,2016-ம் ஆண்டு மாநில விருது சிவகங்கை மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழிக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்துள்ளார்


உலகம்

1.பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரியாக இருக்கும் “ஷாகித் கஹான் அப்பாஸி” நியமனம் செய்யப்ட்டுள்ளார்.
2.உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேசில் முதல் இடத்தையும்,ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
3.பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு பீஜிங் நகரில் நடைபெற்றது.இந்திய சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.


விளையாட்டு

1.ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்து வந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர் காலெப் டிரஸ்செல் கடந்த ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற 50 மீட்டர் பிரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்பிளை, 4 x 100 மீட்டர் பிரீஸ்டைல் கலப்பு பிரிவு ஆகிய பந்தயங்களில் அடுத்தடுத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இரண்டு மணி நேரத்தில் மூன்று போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை 20 வயதான காலெப் டிரஸ்செல் படைத்துள்ளார்.
2.இந்திய கிரிக்கெட் அணியின் மானேஜராக சுனில் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.இலங்கையின் காலேவில் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.


இன்றைய தினம்

1.1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
2.1865 – உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு