இந்தியா

1.வங்கி ஏ.டி.எம்-களில் நடப்பு கணக்கு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல்  நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.
2.டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக அமுல்யா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
3.சென்னை வர்த்தக மையத்தில் 32 -ஆவது சர்வதேச இந்திய தோல் பொருள்கள் கண்காட்சி இன்று முதல் பிப்ரவரி 3 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


வர்த்தகம்

1.பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.


உலகம்

1.ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராகவும், உற்ற தோழனாகவும் இருந்த கோயபல்ஸின், 106 வயது உதவியாளர் பர்ன்ஹில்ட் போம்செல் என்ற பெண்மனி மரணமடைந்தார்.


விளையாட்டு

1.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முடிவுகள் அடிப்படையில் வெளியிடப்பட உலக டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று நவூரு தீவு விடுதலை பெற்ற நாள் 31 ஜனவரி 1968.
2.பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்ட நாள் 31 ஜனவரி 1747.
3.ஐக்கிய அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்ட நாள் 31 ஜனவரி 1958.
4.சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மெக்டொனால்ட் உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்ட நாள் 31 ஜனவரி 1990.


சிறப்பு செய்திகள்

முதன் முதலில்….

1.இந்தியாவில் முதன் முதலில் வரிகொடா இயக்கம் நடத்தியவர் – திப்பு சுல்தான்
2.தமிழில் முதன் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் – ஆனந்தரங்கம் பிள்ளை
3.தமிழில் முதன் முதலில் எழுதிய இலக்கண நூல் – தொல்காப்பியம்
4.உலகில் முதன் முதல் கலைக் களஞ்சியம் – சீன மொழியில் உருவானது.
5.இந்தியாவில் முதன் முதலில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது – தராப்பூரில்.
6.கிளி ஜோசியம் முதல் முதலில் தோன்றிய இடம் – பர்மா.
7.இந்தியாவில் முதன் முதலில் திரைப்படக் கல்லூரி அமைக்கப்பட்டது – சென்னை.
8.சுயராஜ்யம் என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் – தாதாபாய் நௌரோஜி.
9.ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு – 1933 லண்டன்.
10.உலகில் முதன் முதலில் மருத்துவப் படிப்பு முடித்து டாக்டர் பட்டம் பெற்ற பெண் – காரட் ஆண்டர்சன்.
11.முதன் முதலில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்ற நாடு – உருகுவே.
12.எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் ஏறிய முதல் இந்திய பெண் – பச்சேந்திரி பாய்.
13.விசைத்தறியை முதன் முதலில் கண்டறிந்தவர் – இங்கிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் கார்ட்ரைட்.
14.முதன் முதலில் இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை பெற்ற இந்தியர் – சல்மான் ருஷ்டி.
15.இந்தியாவில் முதன் முதலில் தொலைபேசித் தொடர்பகம் நிறுவப்பட்ட இடம் – கொல்கத்தா.
16.பெண்கள் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆண்டு – 1908.
17.முதன் முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் – தாலமி.
18.முதன் முதலில் தேசிய வனவிலங்கு வாரம் தொடங்கப்பட்ட ஆண்டு – 1955.
19.முதன் முதலில் இந்தியாவில் காப்பிச் செடி பயிரிடப்பட்ட இடம் – சிக்மகளர்.
20.முதன் முதலில் இந்தியாவில் நுழைந்த ஐரோப்பியர் – அலெக்ஸாண்டர்.
21.உலகில் முதன் முதலில் ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது – ஜப்பான்.

– தென்னகம்.காம் செய்தி குழு