Current-Affairs-Updates

தமிழகம்

1.ஐ.நா., பெண்கள் அமைப்பின் நல்லெண்ண துாதராக(United Nations Women’s Advocate for Gender Equality and Women’s Empowerment in India) ரஜினியின் மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.இந்தியாவில், பாலின சமன்பாடு, பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது இவரது முக்கிய பணி ஆகும்.
2.தமிழக கடல் வழியாக பயங்கரவாதிகள், கடத்தல்காரர்கள் ஊடுருவலை தடுக்கும் விதமாக , வங்கக்கடல், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 29 அன்று இந்திய கடலோர காவல் படையினர் , தமிழக கடலோர காவல் படையினர், சுங்கத் துறையினர் இணைந்து ‘ஆப்பரேஷன் சஷாக்’ என்ற கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தியா

1.பீகார் மாநில அரசு பேரிடர் அழிவு குறைப்பு திட்ட செயலாக்கத்தை உருவாக்க பாங்காங்கை தலைமையிடமாக கொண்ட Asian Disaster Preparedness Centre (ADPC) என்ற அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்படுள்ளது.
2.மும்பையில் முதலாவது கலை மற்றும் விலங்குகள் திரைப்படவிழா ” Animal – Human – Nature Continuum ” ஜூலை 01 முதல் ஆகஸ்ட் 28 வரை நடைபெற்றது.

உலகம்

1.பிரான்ஸ் நாட்டின் கடற்கரையில் முஸ்லிம் பெண்களால் அணியப்படும் “புர்கினி” ஆடை  அணிந்து கடலில் இறங்கக் கூடாது என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்ததை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.இன்று மல்தோவா நாட்டில் தேசிய மொழி நாள்.

விளையாட்டு

1.ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள்  மோதிய 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 444 ரன்கள் குவித்து புதிய உலக சாதனையை படைத்தது.அந்த அணியின் லெக்ஸ் ஹேல்ஸ் 122 பந்துகளில் 171 ரன்களை குவித்து ரன் அதிகரிப்புக்கு உதவினார்.பின் விளையாடிய  பாகிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 275 ரன்கள்  மட்டுமே எடுக்க முடிந்தது.இதற்கு முன்பு இலங்கை அணி, 2006ல் நெதர்லாந்து எதிராக 443 ரன்கள் எடுத்திருந்ததே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்களாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.