current-affairs

தமிழகம்

1.அடுத்த ஆண்டு ஜனவரி 5 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தபால் தலை கண்காட்சியில், தங்களது தபால்தலைகள் சேகரிப்பை காட்சிப்படுத்த விண்ணப்பிப்பதற்கான தேதியை வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை தபால் துறை நீட்டித்துள்ளது.

இந்தியா

1.வரும் 2017-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.இது வெற்றியடைந்தால் ரஷ்யாவின் சாதனையை இஸ்ரோ முறியடிக்கும்.

உலகம்

1.ஸ்பெயின் நாட்டின் பிரதமராக கன்சர்வேடிவ் பாப்புலர் கட்சியின் தலைவராக உள்ள மரியானோ ரஜோய்(61),   இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.ஐ.நா. மனித உரிமை கவுன்சிளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் ரகசிய வாக்குப்பதிவில் ரஷ்யா குறைந்த அளவு வாக்குகளை பெற்றதன் காரணமாக மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறுகிறது.
3.இன்று உலக சிக்கன தினம் (World Thrift Day).
பணத்தை சேமித்து வைக்க வங்கி, தபால் துறை, சிறுசேமிப்பு அலுவலகம், இன்சூரன்ஸ் போன்றவை இருக்கின்றன. அரசு நிறுவனங்கள் நியாயமான வட்டியை வழங்குவதோடு, உங்கள் பணத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் கம்பெனிகளில் ஏமாந்த கதைகள் ஏராளம் உண்டு. முறையான பாதுகாப்பு வழியில் பணத்தை சேமிக்க இத்தினம் வலியுறுத்துகிறது.

விளையாட்டு

1.மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசிய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்தது.